அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா
குடியாத்தம் ,பிப் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலை யரங்கம் திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் வாசுகி தலைமை தாங்கினார்
முன்னாள் எம்பி ராஜா தொகுதி நிதியில் கட்டப்பட்ட பாபாசாகிப் அம்பேத்கார் அரங்கத்தை முன்னாள் எம் பி ராஜா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் வேலூர் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் ஆ.மலர் வாழ்த் துரை வழங்கினார் நிகழ்ச்சியை கணிதத் துறை தலைவர் முனைவர் எஸ் கருணாநிதி தொகுத்து வழங்கினார்
இதில் முன்னாள் எம்பி டி ராஜா பேசு கையில் நான் சிறு வயதில் இருக்கும் போது குடியாத்தம் ஜெயலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள சித்தாதர் படிப்பகம் அதில் தினசரி பேப்பர்கள் நிறைய வரும் அந்தப் படிப்பகத்துக்குச் சென்று பேப்பர்களில் படித்து வருவேன் என்று சித்தாந்தர் படிப்பத்தின் . சிறப்பை எடுத்துரைத்தார்
விலங்கியல் துறை தலைவர் முனைவர் சிவகுமார் நன்றி கூறினார் விழாவில் ஆணி ராஜா மற்றும் அனைத்து துறை தலைவர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக