விஜய் எங்கள் வீட்டு பையன், அரசியல் வேறு சினிமா வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும், நாலுக்கு நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும்; மதுரையில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள புனித ஜெபஸ்த்தியார் தேவாலயத்தில் நடைபெறும் தேமுதிக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளரின் இல்ல திருமண விழாவில் தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை ஏற்று மணமக்களுக்கு மோதிரம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது.
முதலமைச்சர் சொல்கின்ற குற்றச்சாட்டு, பாஜகவிடம் கேட்டால் காரணங்களை சொல்கிறார்கள், ஆளுங்கட்சி தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எதையாவது ஒன்றை சொல்லி தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள்.
கல்வி மட்டுமல்ல விவசாயம், டெல்டா மாவட்ட மக்களுக்கு முதல்வர் என்ன நிவாரணம் வழங்கி இருக்கிறார். நானும் டெல்டாக்காரன் தான் என்று பேசுகிறார், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து எந்த ஒரு நிவாரணமும் கொடுக்கவில்லை.
எப்போதுமே மத்திய அரசை குற்றம் சாட்டும் தமிழக அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான்.
இது போன்ற உதாரணங்கள் இருக்கும்போது சாக்கு போக்கு சொல்லி முதல்வர் தப்பிக்க முடியாது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும் தான். 75 வருட கட்சியான திமுக கூட்டணி விட்டு தனித்து நிற்க முடியுமா?, அதிமுக பாஜக தனித்து நிற்க முடியுமா?
தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான கிழவிகள் வரை பாலியல் வன்கொடுமையில் மாட்டியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும் மாணவிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். இதற்கு டாஸ்மாக்கும் கஞ்சா புழக்கம் தான் காரணம்,
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
விஜய் எங்கள் வீட்டு பையன் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை. சினிமா வேறு அரசியல் வேறு, இதை விஜய் இடம் நேரடியாக தெரிவித்திருக்கிறேன். சினிமாத்துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் நாம் பாராட்ட வேண்டும். என்ன சாதிக்கப் போகிறார் என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்.
நாலுக்கு - நாலு ரூமில் அமர்ந்து பேசுவதை விட்டுட்டு வெளியே வரவேண்டும் மக்களை சந்திக்க வேண்டும்,
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முஸ்லீம் மக்கள் அண்ணன் தம்பிகளாக பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் வராத பிரச்சனை இப்போது வருகிறது. இதற்கு பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தை பிரித்து ஜாதியை பிரித்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே எந்த பிரிவும் இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் ஆபத்தான விஷயம். திமுக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற விஷயங்களை செய்வது அவர்களின் வழக்கம்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
டெல்லியில் கெஜ்ரிவால் தோல்வி அடைந்து இருக்கிறார், தொடர்ந்து 15 வருடமாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தார்கள், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அரவிந்த் கெஜ்ரவால் ஊழல் குற்றத்தை சரி செய்து நிரூபிக்க முடியவில்லை.
தொடர்ந்து ஆளுநர் சட்டசபைக்கு வருவது கோபித்துக் கொண்டு செல்வது, தேநீர் விருந்தில் சில கட்சிகள் கலந்து கொள்வது, அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துக்கு பின்னாடியும் அரசியல் இருக்கிறது. ஆளுநர் அவரது உரிமையை பேசுகிறார், அதேபோல ஆளுங்கட்சி அவர்களின் உரிமையை பேசுகிறார்கள்.
ஆளுங்கட்சியும், ஆளுநரும் முறைத்து கொண்டிருப்பதால் மக்களுக்கு தான் பிரச்சனை.
234 தொகுதிகளும் எங்கள் கூட்டணி ஜெயிக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கனிம வளம் கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா கற்பழிப்பு ஊழல், வேலைவாய்ப்பு இல்லை உட்பட மக்களுக்கு பல கோபம் திமுக மீது இருக்கிறது.
இன்னும் ஒரு வருடம் இருக்கிறது தேர்தலுக்காக திமுக இனிமேல் நீட் மற்றும் மதத்தை கையில் எடுப்பார்கள், நீட்டை ஒழிக்க முடியாது என்பது இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய சட்டம். அதை ரத்து செய்வோம் என சொன்னது திமுக தான்.
இதை வைத்து அரசியல் ஆதாயம் ஓட்டு கிடைக்கும் என சொன்னது திமுக. திமுகவால் இதை முடிக்க முடியவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார்கள். பட்டி தொட்டி எங்கும் தேமுதிக மிக சிறப்பாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக