பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் மாலை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாமி தரிசனம் செய்தார். பவானி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு 2021 மற்றும் 2023 வரை பயின்ற சுமார் 540 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா என்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவி வசந்தி ஆகியோருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் முக்கூடல் சந்திக்கும்
கூடுதுறையை பார்வையிட்டார்.
பின்னர் ஆதிகேசவ பெருமாள்
சன்னதியில் சாமி தரிசனம் செய்த
அவர் பின்னர் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்பொழுது
அவர் கூறியதாவது, "பழமையான
திருத்தலங்களில் ஒன்றாகும் திகழும்
சங்கமேஸ்வரர் கோவிலும், பவானி
கூடுதுறைக்கு தற்போது தான்
முதல் முறையாக வந்துள்ளேன்.
இந்த வழியாக பலமுறை பயணம்
செய்திருந்தாலும், முதல் முறையாக
இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம்
செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது"
என்றார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் குமார், பவானி தாலுக்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக