மேலப்பாளையம் பிப்ரவரி 22, எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பாக
மாபெரும் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்
தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் நடைபெற்றது.
தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் கனி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர்கள் ஆரிப் பாட்ஷா, அன்வர்ஷா, பொருளாளர் இம்ரான் அலி,பாளை தொகுதி செயலாளர் சலீம்தீன், நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில், செயலாளர் பயாஸ்,
வர்த்தகர் அணி மண்டல தலைவர் ஹயாத் முகம்மது, தொழிற்சங்க மண்டல தலைவர் ஹைதர் இமாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசியலமைப்பு விரோத வக்ஃப் மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும்,
1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இறையில்லங்களை காப்பாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்தீக், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, மகளிர் அணி மாவட்ட பேச்சாளர் சலீமா ஆலிமா ஆகியோர் எழுச்சி உரை ஆற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட, தொகுதி, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி, தொழிற்சங்க அணி, வர்த்தகர் அணி நிர்வாகிகள் உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தொகுதி பொருளாளர் கே.கே.காஜா நன்றி உரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக