ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை.

 

IMG_20250220_164424_651

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை.


மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.


வருகிற 02-03-2025 தேதி அன்று புனித ரமலான் மாதம் நோன்பு துவங்க உள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் காலை முதல் மாலை வரையிலும் நோன்பு இருந்து அதன் பின் மாலையில் நோன்பு திறந்து இரவு நேரம் மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடை பெற்றுகின்றன.


மேலும் ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.


மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பு தொழுகைகள் முடியும் வரையிலும் காவல் துறை பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad