உளுந்தூர்பேட்டை டோல் கேட் அருகே புதிய மின்மாற்றி
உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே சேந்தமங்கலத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ 9.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி வணிக மின் இணைப்புகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டது
இந்த புதிய மின்மாற்றியை கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் கார்த்திகேயன் அவர்கள் இயக்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் பொறிஞர் சர்தார் உளுந்தூர்பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் சேந்த நாடு பிரிவு இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் சேந்த நாடு பிரிவு முகவர்கள் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் வணிக ஆய்வாளர் கணபதி வணிக உதவியாளர் பத்மநாபன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த புதிய மின்மாற்றி மூலம் இப்பகுதியில் சீரான மின்விநியோகம் வழங்க இயலும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழககுரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக