ராஞ்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை பார்வையிடுவதற்காக வந்த கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.
ராஞ்சியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த 42 பெண்கள் 48 ஆண்கள் என மொத்தமாக 90 நபர்கள் ரயில் மூலமாக சென்னைக்கு வந்து சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலமாக சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை பார்த்துவிட்டு தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனை பார்த்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த இரண்டு பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.குமாரமங்கலம் பகுதியில் டீ குடிப்பதற்காக சாலை ஓரமாக நிறுத்தப்பட்ட போது அந்த பேருந்தில் வந்த மூன்றாம் ஆண்டு கால்நடை மருத்துவர் கல்லூரி மாணவர் ஜஷாந்த் குமார் சிவம் என்பவர் சாலையைக் கடந்து சிறுநீர் கழிப்பதற்காக சென்று விட்டு மீண்டும் சாலையைக் கடந்து வந்த போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி முத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் சென்ற கார் அவர் மீது மோதியதில் ராஞ்சி பகுதியில் உள்ள கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவன் ஜஷாந்த் குமார் சிவம் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக