பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்.:சிவசேனா அஞ்சலி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்.:சிவசேனா அஞ்சலி

IMG-20250215-WA0000

 பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்.:சிவசேனா அஞ்சலி


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவ சேனா கட்சி சார்பில் கோயம்புத்தூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி  பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம் அடைந்த தேசத்தின் ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் 


அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அம்மாசத்திரம் சிவசேனா கடசிஅலுவலகத்தில்  அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் சிவசேனா கட்சிமாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்  தலைமையில் மலர் தூவி நினைவேந்தல் மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது 


 தஞ்சை மண்டல தலைவர் ப. உதயகுமார்.  மாவட்ட தலைவர் வெங்கடேஷ் ,திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ப.கார்த்தி  கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் எஸ். மரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன்,அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் ராம.நிரஞ்சன் ,சிவசேனா சிவ.ந. சரவணன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் க .மாதவன், ஆர்.எஸ்.எஸ் .சேவா பாரதி தஞ்சை மாவட்ட தலைவர்  சுதர்சன் , அகில பாரத இந்து மகா சபா தஞ்சை மாவட்ட பொது செயலாளர் தட்சிணாமூர்த்தி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நகர செயலாளர் எல் .முருகன் , நகர தலைவர்  ஜி. ஆர் கணேசன் , நகர இளைஞரணி தலைவர் ஹரிஷ், ,பிஜேபி கே.எம்.பரத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் குடந்தை மாநகரத் தலைவர் அரவிந்த் , நகரச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.இதில் பிஜேபி மற்றும்  சிவ சேனா கட்சி  நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad