தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவரை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை ,துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
முன்னதாக கடற்கரைக்கு சென்று கவர்னர் ஆர். என். ரவி தீர்த்த வாரி செய்து பின்னர் பதியில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி பார்த்து நிர்வாகிகளுடன் உரையாடினார். அவருக்கு பதி சார்பில் குத்துவிளக்கு மற்றும் அய்யனார் வைகுண்டரின் உருவப்படம் வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லைக்கு சென்றடைந்தார். காரில் அவர் செல்லும் வழி நெடுகிலும் சுமார் 100 மீட்டருக்கு ஒரு காவலர் என ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று மதியம் முதல் இரவு 7 மணி வரை பல்வேறு பகுதிகளில் கவர்னர் கார் கடந்து செல்லும் வரை
மக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக