நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மூன்றாம் நாளாக தீப்பற்றி எரிந்து வருகிறது சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பாஜக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக தீப்பற்றி எரிந்து அப்பகுதி புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது,இந்நிலையில் இன்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பாஜக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் இந்த ஆய்வில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உடன் இருந்தனர், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தினார் மேலும் இந்த ஆய்வில் பாஜக பொருளாளரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான டாக்டர்.முத்துராமன், மாநகராட்சி உறுப்பினர்கள். ஐயப்பன்,ரமேஷ், ரோசிட்டா திருமால் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக