குடியாத்தம் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

குடியாத்தம் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

 
குடியாத்தம் ,பிப் 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டாட் சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னில வகித்தார் மகளிர் உரிமை திட்டம் அலுவலர் சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்
1.இக் கூட்டத்தில் 
விவசாயிகளுக்கும் பொது  மக்களுக்கு சவாலாக இருக்கும் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுபடுத்த கூண்டு வைத்து பிடிப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிர் இழப்பு நடந்த பின்னர் கோடி ரூபாய் கொடுத்தாலும் பலன் இல்லை.
2.குடியாத்தம் உள்ளி மலையில் கல் குவாரி எல். என். டி.  நடத்தி வருகிறது இதில்  ஜல்லிகளை அரைத்து வெளியில் லாரியில் ஏற்றி வரும் போது அதன் தூசிகள் பெரிதும் மக்களை பாதிப்பு ஏற்படுத்துவதுடன் குவாரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் சாலைகள் பேருந்துவில் பயணிகள் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சுற்று சூழல் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.ஏற்கனவே கே.வி‌.குப்பம் பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணிற்கு ரூ.25.லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள், வி.தொ.ச. சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனு கொடுக்கப்பட்டது.அதை உறுதி செய்ய வேண்டும்.
4.குடியாத்தம் காக்கா தோப்பு கிராமத்திற்கு சுடுகாடு வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் 
அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.கூட நகரம் பகுதியில் அரிமாஸ் லைட் எரிவது இல்லை இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது அதை தடுக்கும் வகையில் லைட் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.பொங்கலுக்கான வேட்டி சேலை பல இடங்களில் 50.சதம் வழங்க வில்லை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
7.குடியாத்தம் பேர்ணாம்பட்டு பகுதியில் தெண்ணை மரங்கள் அதிகம் உள்ளதால் ராணிப்பேட்டை உள்ள நவுலாக் பண்ணை போல குடியாத்தம் பகுதியில் அமைக்கவேண்டும்.
8.மா மரங்கள் அதிகமாக உள்ளதால் மா பழம் அதிக வரத்து உள்ளதால் மா பழம் சாறு தோழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் பகுதியில் 
லாரிகள் மற்றும் டிராக்டர்களில் 
அளவுக்கு அதிகமாக கட்டுக்கல் ஹாலோ பிளாக் எம் சாண்ட் போன்றவைகள் ஏற்றி செல்லும் போது வண்டியினுடைய பாடிக்கு மேல் லோடிகள் ஏற்றி செல்லும் போது அவைகள் கீழே விழுந்து பொதுமக்களுக்கு இடையூறுகள் மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே அதிகம் பாரம் ஏற்றுவதை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும்
இக்கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் சம்பத் நாயுடு துரை செல்வம் சேகர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள் மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad