கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் விதமாக மூன்று இடங்களில் “ஸ்பிரிங் போல்ஸ்” நிறுவப்பட்டது.
கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் ஜெய பிரகாஷ் ஆகியோர் தலைமையில் காவலர்கள், சுசீந்திரம் ஆஸ்ராமம் சந்திப்பு, கன்னியாகுமரி ரவுண்டானா, சிலுவை நகர் ஜங்ஷன், ஆகிய பகுதியில் விபத்துகளை தடுக்கும் இரவு நேரத்திலும் ஒளிரும் விதத்தில் ஸ்பிரிங் போல்ஸ் நிறுவினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின், கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக