இராமநாதபுரம் எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை, இராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி கமுதி,கடலாடி,மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25.02.2025 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னாவ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக