வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி ஆண்டு விழா.
வாணியம்பாடி, பிப் 23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 31ஆம் ஆண்டுவிழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எம்.விமல் சந்த் ஜெயின் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ஆனந்த் சிங்வி, நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஷ் குமார் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.இன்பவள்ளி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தலைவர் வி.திலீப் குமார் ஜெயின் தலைமை உரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக டாகர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷையன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நட்சத்திர செயல்திறன் விருது, பல்கலைக்கழக அளவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள், சிறந்த வெளிச்செல்லும் மாணவர் விருது, கல்வி சாதனையாளர்களுக்கான விருதுகள், செமஸ்டரில் 100% தேர்வு முடிவு பெற்றுத்தந்த பேராசிரியர்களுக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆண்களை விட பெண்கள் பன்மடங்கு திறன் வாய்ந்தவர்கள், புதுமையை அதிகம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள், உறுதியானவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சிறந்த விளங்குபவர்கள். கல்வி கற்று தந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் அதற்கு உதவியாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்நாளில் மறக்கக்கூடாது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகி ஶ்ரீ நிஷா ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவிகளின் விற்பத்திர்க்கு ஏற்ப பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார்.
தொடர்ந்து மாணவிகளின் நடைபெற்ற கலை நிகழ்ச்சி கூடியிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள் ஶ்ரீபால் குமார் ஜெயின், நவீன் குமார் ஜெயின் உட்பட ஸ்ரீ மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்வி ஆலோசகர் முனைவர் டி.பாலசுப்பிரமணியன், தலைமை நிர்வாக அலுவலர் பி.சக்திமாலா, கல்லூரி பேராசிரியைகள், மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ துறை செயலாளர் எச்.ஆஞ்சல் சர்மா நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக