மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம்

 

IMG_20250226_143859_487

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம்.


மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என பேட்டி.



உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். கோவிலுக்கு  வருகை தந்தவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் மீனாட்சி அம்மன்  சந்நிதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும், பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


பின்னர், கோவிலில் இருந்து வெளியே வந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம்.  சிறப்பான தரிசனம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என்று கூறினார். மேலும் இ. வி. எம். இயந்திரம், தொகுதி மறுவரையரை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad