உழவர் சந்தை பகுதி மேம்படுத்தப்படும்' உறுதியளித்த தி.மு.க. வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமியின் வழிகாட்டுதலின்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை பகுதியில் கடைக்காரர்கள், வீடுகளில் உள்ள வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்பகுதி விவசாயிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள், சம்பத் நகர் பகுதி குடியிருப்பு வாசிகள், நசியனூர் சாலைப்பகுதியில் ஓட்டு சேகரித்து உழவர் சந்தைக்கான தேவைகள், கூடுதல் வசதிகள், அப்பகுதிக்கான பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை, விளைவித்த காய்கறிகள், பழங்களை விவசாயிகளே நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய முதல்வரும் தற்போது புதிதாக பல ஊர்களில் உழவர் சந்தையை விரிவுபடுத்தி உள்ளார். பொதுமக்களுக்கு இயற்கையான, விலை குறைந்த காய்கறிகள் கிடைக்கிறது. அதுபோல, பூமாலை வணிக வளாகம் உட்பட பல்வேறு வாய்ப்புகளை பொதுமக்கள், வியாபாரிகளுக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். உழவர் சந்தை மேம்படுத்தவும், கூடுதல் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் சந்தானம், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக