மெஞ்ஞானபுரம் திமுக நிர்வாகிகள் சார்பில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சைக்கிள் போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

மெஞ்ஞானபுரம் திமுக நிர்வாகிகள் சார்பில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சைக்கிள் போட்டி.

மெஞ்ஞானபுரம் திமுக நிர்வாகிகள் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சைக்கிள் போட்டி மாவட்ட பொருளாளர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழாவையொட்டி கனிமொழி எம்பி மற்றும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி மெஞ்ஞானபுரம் பகுதி திமுக மற்றும் திருநெல்வேலி மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி இன்று நடந்தது. 

மெஞ்ஞானபுரம் மெயின் பஜாரில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் வி பி ராமநாதன் தொடங்கி வைத்தார். 

பொதுபிரிவு மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

 நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், ராஜபிரபு, செட்டியாபத்து பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமுருகன், குலசை பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் கணேசன், உடன்குடி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அஸ்ஸாப் கல்லாச்சி, 

திமுக இளைஞரணி முத்துக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, உடன்குடி முன்னாள் பேரூராட்சி செயலாளர் ஜான் பாஸ்கர்,இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், 

உடன்குடி மேற்கு ஒன்றிய பொருளாளர் விஜயன், குலசை அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், நிர்வாகிகள் மைக்கா ரெத்தினராஜ், கிளை செயலாளர் ஜெரால்டு தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

போட்டியில் பொது பிரிவில் முதலிடத்தை திருநெல்வேலி சேர்ந்த ராஜன் ஸ்மித், 2ம் இடத்தை திருச்சி சேர்ந்த பிரதீப் சங்கரன் மற்றும் 3ம் இடத்தை திருச்சி சேர்ந்த தினேஷ் தட்டி சென்றனர். 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை மெய்ஞ்ஞானபுரம் சேர்ந்த ஜான்பால், 

2ம் இடத்தை கரூரை சேர்ந்த சந்தோஷ்ம் மற்றும் 3ம் இடத்தை கரூரை சார்ந்த மாதேஷ்ம் தட்டி சென்றனர். 

 பொது பிரிவில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 73 , 2வது பரிசாக ரூ. 10,073, மூன்றாம் பரிசாக ரூ. 5073, 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசு ரூ.7,073, 2வது பரிசு ரூ.5,073, 3வது பரிசாக ரூ.3,073 தொகையை பொருளாளர் ராமநாதன் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் ராஜாபிரபு, தினகர், சாம் டக்கர், ஜெயக்குமார், முத்துக்குமார், பிரவின் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad