நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாடு கோர்ட் உத்தரவு.
நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரிக்கு வரும் பேருந்துகளில் நடத்துனர்கள் நீலகிரிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டுசென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்கின்றனர். அதையும் மீறி கொண்டுவரும் பயணிகளிடம் சோதனைச்சாவடியில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் நீலகிரிக்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்குடன் பயணித்து நுழைந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக