பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்காக குருவாயூரில் இருந்து குமரிமுனை வந்த முதியவர்.
கடலில் உள்ள பாறையில் ஏறி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரின் செயலில் சந்தேகப்பட்டு அவரை கடலில் குதித்து தற்கொலை செய்ய விடாமல் பாறையில் இருந்து வெளியேற்றி தடுத்து நிறுத்திய குமரி சுற்றுலா தலத்தை சேர்ந்த தங்கராஜ் என்ற புகைப்பட கலைஞர். முதியவரை மீட்டதோடு அவரது குடும்பத்திற்கும் தகவல் கொடுத்து பின்னர் தற்கொலைக்கு முயன்ற முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்த புகைப்பட கலைஞர். ஓர் உயிரை காப்பாற்றிய புகைப்பட கலைஞரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக