உளுந்தூர்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி சுற்றுச்சூழல் ஓரமாக குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன் குப்பைகள் எரிக்கப்பட்ட இடத்தில் தவறி விழுந்ததில் மாணவன் கைகளில் தீக்காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் காமேஸ்வரன் 12 வயதான இவர் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவன் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தார் . அதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சேகரித்து பள்ளியின் சுற்றுச்சூழல் புறமாக ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்து உள்ளனர். அந்த தீயை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் என்றும் மதியம் உணவு இடைவெளியின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவர் சக மாணவர்களுடன் சென்று விளையாடிக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பையில் தவறி விழுந்துள்ளார். இதில் மாணவனின் இரண்டு கைகளில் தீக்காயம் ஏற்பட்டு துடிதுடித்து அழுது உள்ளார். இதனை அறிந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு பாதிக்கப்பட்ட மாணவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட குப்பையில் மாணவன் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக