ஸ்ரீவைகுண்டம் பிப் 7. அரசு அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு பணம் வழங்கும் அலுவலகம் கருவூலம் ஆகும். ஸ்ரீவைகுண்டம் சார்நிலை கருவூலத்தில் உதவி கூடுதல் கருவூல அலுவலர் சிவனுப்பாண்டியன் திருநெல்வேலி மாறுதல் ஆகியதால் திருநெல்வேலி கருவூலத்திலிருந்து அன்னாள் பாக்கியம் 04.02.2025 முதல் ஸ்ரீவைகுண்டம் சார்நிலை கருவூலத்தில் உதவி கூடுதல் கருவூல அலுவலர் ஆக பணியேற்றார்.
அவரை உதவி கருவூல அலுவலர் சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
உடன் சங்க பொருளாளர் சீனிப்பாண்டியன். செயலாளர் மாடசாமி சொர்ணம். உதவி செயலாளர் சங்கையா. உறுப்பினர் சம்பந்தம். அலுவலக உதவியாளர்கள் முகமது இர்ஷாத். பார்வதி சிவன். ஞானப் பழம். கார்டு செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக