மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவேரி கூட்டு குடிநீர் உடைப்பு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே பெருகி வீணாக செல்கிறது
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பழைய செக்போஸ்ட் வணிக வளாக பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடங்களாக சாலையில் பெருக்கெடுத்து ஒடுகிறது இதனை பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தில் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளதாகவும். இப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் ஸ்டேஷனரி கடைக்கு சென்று நோட்டு புத்தகம் எழுது பொருள்கள் வாங்க செல்கின்றனர் கடையின் வாசலில் காவேரி கூட்டு குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் மீது தான் காலை வைத்து செல்லவேண்டும். தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுத்துவதாகவும். இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை மேற்கொண்டு அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக