மானாமதுரை பழைய பேருந்து நிலையம் ரயில்வே கேட் சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து காவல்துறையினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் நிலையில் மானாமதுரை போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து இடையூறை சரி செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மானாமதுரை போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலை தொடர்ந்து, சார்பு ஆய்வாளர் திரு மகிமைதாஸ் அவர்களின் முன்னிலையில் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் சாலையில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாக பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு சாலை போக்குவரத்தில் வாகனங்கள் இடையூறின்றி செல்வதற்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல்துறையினர் முனைப்பாக ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக