குடியாத்தம் பிப் 8 -
வேலூர் மாவட்டம் வேலூர் பாலாற்றங்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் சடலம் அடக்கம் செய்த சமூக ஆர்வலர் வேலூர் கோட்டை அகழி அருகில் கடந்த சில நாட்களுக்கு 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதேபோல் கொணவட்டம் பெரிய மசூதி அருகில் கடந்த15. 1.25 அன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.இந்நிலையில் இரண்டு சடலங்களையும் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு . அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கள் வைத்தனர் அவர்களைப் பற்றி விளம்பரம் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க சாசனத் தலைவரும் உயிர் அறக்கட்டளை நிறுவனமான சமூக சேவகர் ரொட்டேரியன் எம் கோபிநாத் அவர்களை தொடர்பு கொண்டு இரண்டு உடலை அடக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தார் உடனடியாக ரோடேரியன் எம் கோபிநாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைப் பெற்றுக் கொண்டார்
இறந்தவரின் உடலை சமூக சேவகர் எம்.கோபிநாத் வேலூர் மாநகராட்சி வழிகாட்டுதலின்படி உரிய மரியா தையுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் அவரது சொந்த செலவில் வேலூர் பாலாறு இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார்.வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர் வேல் குமார் கோபிநாத்துக்கு தேவையான ஆவணங்களை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக