குடியாத்தம் ,பிப் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராமாலை கிராமத்தில் இன்று 6/ 2 /2025 இரவு சுமார் 9:30 மணி அளவில் தண்ணீர் பந்தல் பாக்கம் ஈபி காலனி அருகில் வசிக்கும் சிவசங்கர் மகன் சத்தியசீலன் என்பவர் ராமாலை பேருந்து நிறுத்தும் இடத்திற்கு நடந்து வரும்போது எதிரே வந்த வீரபாண்டி என்பவருடைய இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்தியசீலன் என்பவர் உயிர் இறந்துள்ளார். மேலும் வீரபாண்டி என்பவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் பரதராமி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக