ஸ்ரீவைகுண்டம் - நதிக்கரை கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ஸ்ரீவைகுண்டம் - நதிக்கரை கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்.

ஸ்ரீவைகுண்டம் - நதிக்கரை கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம். 

ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 3 நவதிருப்பதி களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் நதிக்கரையில் உள்ள கள்ளப்பிரான் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணன். நடந்தது. நேற்று முன்தினம் கும்பம் பிரதிஷ்டை செய்து 3 வேளை யாக பூஜை நடைபெற்றது.

நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூபம். 5 மணிக்கு யாகம். 8.15 மணிக்கு பூர்ணாகுதி. 8.30 மணிக்கு கும்பம் சுற்றி வந்து 8.44 மணிக்கு ஸ்வாமி கிருஷ்ணன் மூலவருக்கு அர்ச்சகர் சர்வ சாதகம் சீனிவாசன கும்பம் தீர்த்தம் அபிஷேகம் செய்தார். பின்னர் அலங்காரம் செய்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகள் சென்னை கல்சுரல் சம்ஸகிரீட் பவுண்டேசன் மற்றும் வேணுகோபாலசுவாமி கைங்கர்யம் அறக்கட்டளை ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கோயில் அர்ச்சகர் கண்ணன் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் 

ஆய்வாளர் முருகன். கள்ளப்பிரான் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். லெட்சுமி பேக்கரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். தி மு க பிரதிநிதிகள் அருண் கிருஷ்ணன். காசி சண்முகம். சீனிவாசா 

அறக்கட்டளை பொறியாளர் சுப்பு கோவில் அறக்கட்டளைதாரர். விஸ்வநாதன். நீதிபதி மகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad