குடியாத்தம் , பிப் 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காணாமல் போன சிறுமியின் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தரணி-
பிரியா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா(வயது 3). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது தம்பியுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் அவரை காணவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி
கிடைக்காததால் தரணி குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
சிறுமியை கண்டுபிடிக்க 2- தனிப் படைகள் அமைக்கப்பட்டன. கடந்த 3- நாள்களாக சிறுமியின் வீட்டை சுற்றி உள்ள நீர்நிலைகள், கிணறுகள் ,புதர்களில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தரணியின் வீட்டிலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள
புதர் மண்டிய, பாழடைந்த கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பது
வெள்ளிக்கிழமை மாலை தெரிய வந்தது.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அரை மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர். சடலத்தை போலீஸார் பிரேத
பரிசோனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக