கோவில்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் கல்லூரி சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை இராமநாதபுரம் உள்ள பரக்கத் மஹாலில் நடைபெற்றது.
ஸ்டுடண்டஸ்டாட்காம் நிறுவனர் சாலிக் ரஹ்மான் தலைமையுரையாற்றினார்.ரெ ங்கநாயகி வரதராஜ் கல்லூரி துணை தலைவர் பிருந்தா ராகவன், செயலாளர் ராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பேச்சாளர் கவிதா ஜவகர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்டுடண்டஸ்டாட் காம் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக