இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இராமநாதபுரம் மாவட்டதி.மு.க.சார்பில், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் 850 கபடி வீரர்க ளுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகர ணங்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 850 கபடி வீரர்களுக்கு ரூ.26 லட்சத்து 35 ஆயி ரம் மதிப்புள்ள காப்பீடு திட்டம் மற்றும் உபக ரண பொருட்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இனிவரும் காலங்களில் தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து கபடி வீரர்களுக்கும் க காப்பீட்டு திட்டம் மற்றும் உபகரண பொருட்கள் வழங்கப்படும் என்றார்.
இதில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, கீழக்கரை நகர்மன்ற தலை வர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், மாவட்ட அயலக அணி தலைவர் முகமது ஹனிபா மற்றும் கீழக்கரை நகர் தி.மு.க.உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக