50 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றும் 80 வயதான மருத்துவர் பார்வதி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

50 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றும் 80 வயதான மருத்துவர் பார்வதி.

1002505511

50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை வாடகை வீட்டில் இருந்தும் 80 வயதிலும் நாள்தோறும் மருத்துவ சேவை அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும் மருத்துவர் பார்வதி, மூன்று தலைமுறைகளுக்கு மேலாக மருத்துவம் பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பொதுமக்கள். 


"எத்தனை வயதானாலும் தான் மருத்துவம் பார்க்கும் பொழுதே தன் உயிர் பிரிய வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை" என தெரிவித்த மருத்துவர் பார்வதி.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மருத்துவம் பார்த்து மருத்துவ சேவை செய்து வரும் என்பது வயதிலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை செய்து வரும் அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும் மருத்துவர் பார்வதி இவர் கடந்த 1946 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் படித்து முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் அதே கல்லூரியில் சீனியர் மருத்துவராக பணியாற்றி பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உடலியல் மருத்துவ ஆசிரியராக இளம் மருத்துவர்களை பயிற்றுவித்துள்ளார். 


பார்வதியின் கணவர் சந்திரசேகரனும் மருத்துவர்  இந்நிலையில் பணி மாறுதல் பெற்று பொறையார் அரசு மருத்துவமனைக்கு பணியாற்ற வந்தார் இவர் கணவர் சந்திரசேகர். இந்நிலையில் இவர் கணவர் சந்திரசேகரை பொறையார் மக்கள் எம் ஜி ஆர் என அழைக்கும் அளவிற்கு மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு சிகிச்சை மட்டும் அளிக்காமல் மருத்துவ சீட்டோடு பணத்தையும் கொடுத்து அனுப்பும் இரக்க குணம் கொண்டவர் சந்திரசேகர், என பலரும் தெரிவிக்கின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்று வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் சந்திரசேகர் 2014 ஆம் ஆண்டு  இயற்கை எய்தினார். 


மருத்துவர் சந்திரசேகர் மறைவுக்குப் பிறகு மருத்துவர் பார்வதி பொறையார் பகுதியில் வாடகை வீட்டிலேயே தங்கி தனது மருத்துவ சேவையை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார் 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் 80 வயதிலும் இன்றுவரை வாடகை வீட்டிலேயே வகித்து வரும் நிலையில் அந்த வீட்டிலேயே மருத்துவ சேவையும் செய்து வருகிறார் நாள்தோறும் நேரம் பாராமல் தன்னைத் தேடி வருபவர்களுக்கு உடனடியாக மருத்துவம் பார்த்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குவதோடு ஆறுதலாக தனது குடும்பத்தினர் போல உரையாடி அனுப்புவதால் மருத்துவர் பார்வதியை மருத்துவம் பார்க்க வரும் அனைத்து பொதுமக்களும் அம்மா என்றும் அக்கா, ஆட்சி என்றும் செல்லமாக அழைக்கின்றனர். பல்வேறு மருத்துவ சேவைகளை செய்து வருகிறார் மேலும் 50 ஆண்டு காலத்தில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு "மகப்பேறு" பார்த்துள்ளதாகவும் ஒரு முறை கூட உயிர் சேதம் ஏற்படாமல் தாய் சேய் இருவரையும் காப்பாற்றி அனுப்பிய பெருமை கொண்டவர் எனவும் கூறுகின்றனர். 


கொரோனா காலத்திலும் எத்தனையோ மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க பயந்த போது தன்னை தேடி வந்த குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தனது  அரவணைப்பில் அழைத்து தன் குடும்பத்தில் ஒருவர் போல முகக்கவசம் கூட அணியாமல் மருத்துவ சேவை பார்த்ததாகவும் இது தனக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கிறார் மருத்துவ பார்வதி, மருத்துவ சேவை என்பது மற்ற பணியை போன்று அல்ல மருத்துவ சேவைக்கு ஓய்வு கிடையாது என தன் தந்தை தன்னிடம் கூறியது நினைவுக்கு வருவதாகவும் எனவே தான் மருத்துவம் பார்க்கும் பொழுதே தன் உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது வாழ்நாள் விருப்பம் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மருத்துவர் பார்வதி, இன்றளவும் தான் மருத்துவம் பார்ப்பதற்கு கட்டணம் என பெரிதாக நிர்ணயம் செய்து வாங்குவது இல்லை மருத்துவம் பார்ப்பவர்கள் அதிகபட்சம் 100 ரூபாய் வழங்குகின்றனர் இருப்பினும் எத்தனையோ ஏழை குடும்பத்தினர் வரும்பொழுது கட்டணம் இல்லாமலும் மருத்துவம் பார்ப்பதோடு தன்னிடம் இருக்கும் சில மருந்துகளையும் வழங்கி ஆலோசனைகள் வழங்கி அனுப்புகிறார் அதுமட்டுமின்றி பல்வேறு ஏழை குடும்பத்தில் உள்ள பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் பொது மக்களிடம் தன் குடும்பத்தில் ஒருவர் போல நேரம் பாராமல் பாசத்தோடு பரிவோடு மருத்துவர் பார்வதி பழகுவதால் தான் அனைவரும் அம்மா அக்கா ஆட்சி என்று அழைக்கின்றனர்.  


தன் மகன் மருமகள் பேர குழந்தைகள் பெங்களூருவில் வசித்து வரும் நிலையில் தன்னந்தனியாக பொறையார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு மருத்துவ சேவையை தொடர்ந்து வரும் மருத்துவர் பார்வதியிடம் மருத்துவம் பார்க்க வரும் பலர் தாங்கள் தனியாக இருப்பதை விடுத்து தங்கள் மகனுடன் போய் இருக்கலாமே இதற்கு மேலாவது ஓய்வு எடுக்கலாமே மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கலாமே எனக் கூறினால் மருத்துவ பார்வதி அதற்கு பதிலாக தனக்கு வயதாகி விட்டதா தாங்கள் கூறும் பொழுது தான் தெரிகிறது என சிரித்துக் கொண்டே கூறுவாராம் மேலும் தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு மருத்துவம் சேவை செய்வதே தனது வாழ்நாள் ஆசை எனவும் அதனை ஒருபொழுதும் விடமாட்டேன் எனவும் கூறுகிறார் தன் மகன் மருமகள் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு வெளியூர் சென்றாலும் ஒரு சில நாட்களிலேயே திரும்பி வந்து விடுவதாகவும் இல்லை என்றால் தனக்கு தூக்கம் கூட வராது எனவும் தான் தினமும் மருத்துவ சேவை பார்த்தால் தான் தனக்கு உறக்கம் வரும் எனவும் கூறுகிறார்.


எனவே தான் தன் உயிரை விடும் வரையில் மருத்துவம் பார்க்கும் சேவை தொடரும் என ஆனந்த கண்ணீருடன் தெரிவிக்கிறார் குறிப்பாக இது நாள் வரை தனக்காக சொந்த வீடோ சொந்த கார் போன்ற வாகனமோ எதுவும் வாங்கியது கிடையாது இவற்றைப் பார்த்து இப்பகுதி மக்கள் வியப்படைகின்றனர் இந்த காலத்திலும் இப்படி ஒரு மருத்துவரா இவரின் சேவையை  பார்த்து பலர் சேவை செய்வதற்கு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


மேலும் நேரில் வர முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்போன் மூலமும் வீடியோ கான்பரென்சிங் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad