மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவியை மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்ற ஊர் மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் கோபிகா, இவர், புதூர் பகுதியில் உள்ள அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 9 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில்,
நேற்று கடலூர் மாவட்டம், வேப்பூரில், மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சிலம்பாட்ட போட்டியில் வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி கோபிகா பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதகங்களையும், சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வென்று, இன்று ஊர் திரும்பிய நிலையில்,
அம்மாணவியிற்கு திருமாஞ்சோலை பகுதி மக்கள், மேளதாளங்கள் முழங்க ஊற்சாக வரவேறப்பு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக