ஜிஎஸ்டி சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து கார் வேன் அரசு பேருந்து என நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த முருக பக்தர்கள் 8 பேர் லேசான காயம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

ஜிஎஸ்டி சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து கார் வேன் அரசு பேருந்து என நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த முருக பக்தர்கள் 8 பேர் லேசான காயம்

IMG-20250222-WA0026

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து கார் வேன் அரசு பேருந்து என நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த முருக பக்தர்கள் 8 பேர் லேசான காயமடைந்தனர்.


சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சிக்கு சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தை துறையூரை ‌ சேர்ந்த கருணாநிதி என்பவர் ஒட்டி வந்தார் இந்தப் பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் காஞ்சிபுரத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு 15 முருக பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்தது அதன் பின்னால் ஒரு காரும் அதன் பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு தனியார் சொகுசு பேருந்தும் வந்த நிலையில் அதிவேகமாக வந்த சொகுசுப் பிறகு கார் மீது மோதியது இதைத் தொடர்ந்து கார் வேன் மீது மோதியதால் வேன் அரசு பேருந்து மீது மோதியது இதனால் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட நிலையில் ஏனெனில் பயணம் செய்த முருக பக்தர்கள் 8 பேருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் என்று உயிர்த்தப்பினர் இந்த விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியைச் சேர்ந்த முருகன் மற்றும் வானில் பயணம் செய்த சந்தோஷ் பிரசன்னா செல்வக்குமார் சுகுந்தன் சண்முகம் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பெறுகின்றனர் இந்த விபத்தின் காரணமாக சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad