மேல் கூடலூர் பக்கீர்ஷா தர்கா 86 ஆம் ஆண்டு உரூஸ் நிகழச்சி
நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் புகழ் பெற்ற பக்கீர்ஷா தர்காவின் 86 ஆம் ஆண்டு நேர்ச்சையும், மஜ்லிசுன்னுூர் ஆண்டுவிழாவும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 21.02.2025 அன்று தொடங்கிய இந்த விழாவிற்கு கமிட்டி தலைவர் பசீர் கொடியேற்றினார்.பல இஸ்லாமிய தலைவர்களின் மத நல்லிணக்க சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.சாதி மதம் பாராமல் அனைத்து சமூக மக்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி 23.02.2025 அன்று நிறைவு பெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக