திருமங்கலம் அருகே செக்காணூரனியில்8.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கானூரணியில் புதிதாக 8.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கட்டுமான பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி பதித்த போது அனைத்து ஊர்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பால வேலைகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அதன் அடிப்படையில் இந்த அடிக்கல் நாட்டு விழா மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்காணூரனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு.மணிமாறன், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன்,மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா செய்ய பொறியாளர் ஊரக வளர்ச்சித்துறை இந்துமதி உதவி செயற்பொறியாளர் விஜயா சித்ரா பி மாயன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக