ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா

 

IMG-20250224-WA0274

இராமநாதபுரத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர்  ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.


இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாஆகியோர்களின் தெய்வீக அருளாசியுடன்... பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், மாண்புமிகு எடப்பாடியார் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி, தலைமையில். அம்மா பேரவை துணைச்செயலாள G.முனியசாமி, எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாள RG.ரெத்தினம், கழக மாணவரணி துணைசெயலாளர் K.செந்தில்குமார், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் S.கவிதாசசிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானிசீனிகட்டி ஆகியோர்களின் முன்னிலையில் வரவேற்பு மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் RG.மருதுபாண்டியன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் R.இராஜேந்திரன் மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் KS.மாரியப்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் தங்கத்தாரகை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா என்றும் மக்களால் போற்றப்படும், முன்னாள் முதலமைச்சரும் அ.இ.அ.தி.மு.க வின் பொதுச் செயலாளருமான  ஜெ.ஜெயலலிதாவின் 77வது, பிறந்தநாள் விழா பாரதிநகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஜெ.ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து  கேக் வெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி, வெகு சிறப்பாக கொண்டாடினர். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய, கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,கிளை கழக செயலாளர்கள், கிளை கழக மேலவை பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் மகளிர் அணியினர் பொதுமக்கள் உட்பட  அனைவரும் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.மாவட்ட மாணவரணி இணைசெயலாளர். S.வினோத் நன்றியுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad