நீலகிரி மாவட்டம் உதகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா.
நீலகிரி மாவட்டம் உதகையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இன்று மதியம் ஒரு மணி அளவில் உதகை ஏடிசி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை முன்னாள் மேயரு மான சே மா வேலுச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள். பால நந்தகுமார் அவர்கள் வினோத் அவர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் இளைஞர் பாசறை தலைவர் அக்கீம் பாபு அவர்கள் மற்றும் மகளிர் அணி தலைவர்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தினை நகரச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைவருக்கும் மதியம் பிரியாணி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக