நெமிலியில் அம்மாவின் 77- வது பிறந்தநாள் விழா சு. ரவி எம்எல்ஏ பங்கேற்பு!
ராணிப்பேட்டை, பிப் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77- ஆம் ஆண்டு பிறந்தநாள் நெமிலி நகர செயலாளர். செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்றத் உறுப்பினருமான சு. ரவி எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இந்த நிகழ்வில் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், நெமிலி ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன், நெமிலி நகர அவைத்தலைவர். சங்கர், மாவட்ட பொறுப்பாளர். சுகுமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக