குடியாத்தம் , பிப் 24 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கிழக்கு, மேற்கு ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று (24.2.25) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அம்மா உணவகம் தந்த அட்சய பாத்திரம் தாலிக்கு தங்கம் தந்த தங்கத் தாரகை விலையில்லா மடிக்கணினி வழங்கிய மனிதர் குல மாதரசி இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் V.ராமு, நகர கழக செயலாளர் J.K.N.பழனி ஆகியோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், ஒன்றிய கழக செயலாளர்கள் T. சிவா, S.LS வனராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் M.பூங்கொடி மூர்த்தி, மாவட்ட கழக சார்பணி செயலாளர்கள் S.I.அன்வர் பாஷா, S.S.ரமேஷ் குமார், நடிகர் வெங்கடேசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் A.ரவிச்சந்திரன், M.பாஸ்கர், K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், P.அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், V.ரித்தீஷ், G.தேவராஜ், சேவல் E.நித்தியானந்தம், S.D.மோகன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக