திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய 70ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் எழுத்தர் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிய புரோக்கரின் வங்கி கணக்கு மூலம் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பாண்டியராஜன் மற்றும் புரோக்கர் பாலமணிகண்டனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகே கிழவனேரி ஆனந்த ராஜுக்கு சொந்தமான 3.18 ஏக்கர் நிலத்தை அப்பகுதி செந்தில்குமார் வாங்கினார் இதற்காக பத்திரம் பதிய கடந்த ஜனவரி 26 ஆம் தேதி திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் சென்றார் சார்பதிவாளர் பாண்டியராஜன் அவரிடம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார் செந்தில்குமார் லஞ்சம் கொடுக்காத நிலையில் ஆவணங்களை முழுமையாக கொண்டு வருமாறு சார் பதிவாளர் தெரிவித்தார். இந்நிலையில் ஆனந்தராஜனின் இடத்திற்கான ஒரிஜினல் ஆவணங்களை சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போயின. இது குறித்து ஆனந்தராஜ் புகார் அளித்து ஆவணங்களை காணவில்லை என சான்றிதழ் பெற்றார். இந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை பரிசோதித்த பிறகு பிப்ரவரி 21 ல் செந்தில்குமார் பெயருக்கு பத்திரம் பதியப்பட்டது. அந்த ஆவணங்களை வாங்க சென்ற செந்தில் குமாரிடம் 70ஆயிரம் லஞ்சம் தருமாறு பாண்டியராஜன் கூறினார்.இது குறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார் போலீசார் கொடுத்த அறிவுரையின்படி நேற்று இந்த பணத்தை திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாண்டியராஜனிடம் செந்தில்குமார் கொடுக்க சென்றார் ஆனால் பணத்தை புரோக்கர் பாலமணிகண்டனிடம் கொடுக்கும்படி பாண்டியராஜன் தெரிவித்தார். பால மணிகண்டன் தன் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு செந்தில்குமரிடம் கூறினார்.அதன்படி செந்தில்குமார் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார் இது குறித்து பால மணிக்கண்டிடம் லஞ்ச ஒழிப்பு ஏ. டி. எஸ். பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, ரமேஷ் பிரபு, பாரதி பிரியா மற்றும் போலீசார் விசாரித்தனர் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் படி பாண்டியராஜனிடம் விசாரித்தனர் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக