சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயம் வங்கி துணை மேலாளர் கைது போலீசார் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயம் வங்கி துணை மேலாளர் கைது போலீசார் விசாரணை.

IMG_20250218_164717_525

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயம் வங்கி துணை மேலாளர் கைது போலீசார் விசாரணை.



மதுரை மாவட்டம் காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிளை மேலாலராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த 14 11 2024-ம் தேதி பேங்க் ஆப் பரோடா வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் என்பவர் உத்தரவுபடி மேற்படி வங்கியில் ஆய்வு செய்தபோது கடந்த 09/2023 ஆம் தேதி முதல் 09/2024 ஆம் தேதி வரை அடகு வைத்த 9 நபர்கள் நகைகள் சுமார் 561.5 கிராம் பொட்டலங்களாக வங்கி லாக்கரில் வைத்துள்ளார் அங்கே சென்று பார்த்தபோது இல்லை. அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது நகைகள் காணாமல் போய் விட்டது .


இந்நிலையில் மேற்படி பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிசான் என்பவர் 16 2 2025 ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் காடுபட்டி காவல் நிலைய குற்ற எண் 11/25 பிரிவு 316(5) BNS படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வங்கியின் துணை மேலாளர் கணேஷ் 33 த/பெ காளிதாஸ் ஹவுசிங் போர்டு காலனி
மல்லிகை நகர் ஆனையூர் மதுரை மாநகர் என்பவரை கைது செய்து  17.02.2025. தேதி  நீதிமன்ற காவலுக்கு அனுப்ப பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad