பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு நெல்லை அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை. கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக