ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எலவானசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எலவானசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

IMG-20250218-WA0242

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எலவானசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் குடிநீர் மின் மோட்டார் பழுதானதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் கடுமையாக அவதிப்பட்டு வரும் புகைப்பட்டி கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் பழுதான மின்மோட்டாரை சரி செய்யப்படவில்லை இதனால் தொடர்ந்து புகைப்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பழுதான குடிநீர் மின்மோட்டாரை சரி செய்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் புகைப்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் எலவனாசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் இன்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இது பற்றி தகவல் அறிந்த எலவானசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து போர்க்கால அடிப்படையில் பழுதான குடிநீர் மின் மோட்டார்களை சரி செய்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad