குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேரணாம்பட்டு அடுத்த பக்காலாபல்லியில் ரூ.402.52 இலட்சம் மதிப்பில் நுகர் பொருள் வாணிபக் புதிய கட்டிடம் திறப்பு
பேரணாம்பட்டு , பிப் 20 வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு அடுத்த வாக்காளர் பல்ல தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்து பக்காலப்பள்ளி கிராமத்தில் ரூபாய் 402.52 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் பேர்ணாம் பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா துணைத் தலைவர் அலியார் ஜூபேர் அகமத் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தனபதி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கரன் வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன் நகராட்சி ஆணையர் வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக