ராமநாதபுரம் வாகன சோதனையில் இலங்கைக்கு கொண்டு செல்ல கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் (எச்சில்) பிடிபட்டது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் கடத்திய 6 பேர்களை கைது செய்த காவல்துறை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு புகயிலை.கஞ்சா மஞ்சள் மிளகு சுக்கு பீடி சிகெரெட் பண்டல் கணக்கில் இராமேசுவரம் பாம்பன் மண்டபம் வேதாளை பகுதிகளில் உள்ள கடற்கரை வழியாகக் கொண்டு செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது இதில் பட்டணம்காத்தான் -EGR ராம்நகர் தேசிய நெடுஞ்சாலையில் இலங்கைக்கு கொண்டு செல்ல காரிலை கடத்தி வரப்பட்ட 360 கிலோ கஞ்சா பிடிபட்டது.
இதனை கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார். பறிமுதல் செய்தனர்.மேலும் மேலக்கோட்டை ECR சாலையில் கேணிக்கரை போலீசார் வாகன சோதனையின்போது சந்தேகத்தின் இடமான கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் இலங்கை கடத்துவதற்கான ரூபாய் 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளதை அடுத்து . கடத்தி வர பயன்படுத்திய கார் அதனை கடத்தி வந்த கார், மற்றும் மதுரை,தேனி, இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர்களையும் கேணிக்கரை போலீசார் கைது செய்து இராமநாதபுரம் தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினக் குற்ற பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இராமநாதபுரம் இராமேசுவரம் பாம்பன் மண்டபம் உச்சிப்புளி வேதாளை பகுதிகளில் இருந்து கடல் மார்க்கமாக போதை பொருள்கள் இலங்கைக்கு கடத்தி செல்வதும் அங்கிருந்து தங்கம் போதை பொருள்கள் போன்றவை கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக