காட்பாடி , பிப் 6 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்ததிவருகிறது. 26வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு 6 மையங்களில் காலை 10:00 மணிக்கு ஆரம்பமானது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் துளிர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பே.அமுதா தலைமையில் இணை செயலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்.கோட்டீஸ்வரி செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் துணைத்தலைவர் கே.விசுவநாதன், வேலூர் கிளை செயலாளர் முத்து சிலுப்பன், பொருளாளர் ப.சேகர் தலைமையாசிரியர் சௌந்தர்யா, ஆசிரியை மோகனப்பிரியா, பள்ளி தாளாளர் திவ்யா துளிர் பள்ளி தலைமையாசிரியர் த.கனகா, இளவழகன் உள்ளிட்ட குழுவினர் தேர்வினை மேற்பார்வையிட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் துளிர், சன், அமைதிப்பூங்கா ஆகிய மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் பென்னாத்தூர், தாண்டிமனபள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட ஆறு மையங்களில் 67 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா. ஜனார்த்தனன் கூறியதாவது… வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்பட்டது. நான்கு விடைகளிலிருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் வகையில் 50 வினாக்கள் கேட்டக்கப்பட்டது. கேள்விகள் இயற்பியல், வேதியில் , உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும், அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்களுக்க அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றம் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும்.
வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக