இதனை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி குடிநீர் கழிப்பிடம், பஸ் வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக