இராமநாதபுரம் சத்திரகுடி அருகே இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட 3 டன் மஞ்சள் மூடையை சுங்க இலாக அதிகாரிகள் கைப்பற்றினர்.
இராமநாதபுரம் சந்திரக்குடி அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் மஞ்சள் மூடைகள் இராமநாதபுரம் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி துணை ஆணையாளர் பிரகாஷ், மற்றும் கண்காணிப்பாளர் பாபுராவ், ஆகியோர் தலைமையில் சென்ற அதிகாரிகள் சத்திரக்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மதுரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக இராமநாதபுரம் நோக்கி வந்த பால் வண்டியை நிறுத்தியபோது நிறுத்தாமல் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் அதில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். வாகனத்தை சோதனை செய்ததில் இலங்கைக்கு கொண்டு செல்ல கடத்தி வரப்பட்ட 3 டன் மஞ்சள் மூடைகள் இருந்துள்ளன அவைகளை கைப்பற்றிய சுங்க இலாகாவினர் கடத்தி வந்தவர்கள் தப்பியோடிய நிலையில் மஞ்சள் மூடைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் சுங்க இலாக அதிகாரிகள் கைப்பற்றினர். தப்பியோடிய நபர்களை சுங்க இலாகா அதிகாரிகள் வலை வீசி தேடிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக