திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் அறிவொளி நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பின்தங்கிய விளிம்பு நிலை மக்கள் நரிக்குறவர் இன மக்களுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை என பல்வேறு அடையாள அட்டைகள் இன்றி இப்பகுதியில் வாழ்ந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து,பல்லடம் வட்டாட்சியர் ஜீவா பகுதியில் முகாமிட்டு ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை தற்போது வழங்கி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் அடையாள அட்டைகளே இல்லாமல் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவது பற்றி வருவாய் துறையினர் கூறும் போது விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்று வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறையினர் முகாமிட்டு அடையாள அட்டைகள் தற்போது வழங்கி வருகின்றனர்,இது போன்று அடையாள அட்டைகள் இல்லாதோர் உடனடியாக வருவாய் துறையை நாட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக