தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல்.

தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல்!

தூத்துக்குடியில் மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ புகையிலை மற்றும் ரூ.3½ லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த மொபட்டில் வந்த வாலிபரை தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த 3 சாக்குப்பைகளை சோதனை செய்தனர். 

அப்போது அதில், 40 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், அவற்றை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும், ஒரு சாக்குப்பையில் ரூ.3½ லட்சம் பணமும் இருந்தது. அந்த பணத்தையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், முத்தம்மாள் காலனியை சேர்ந்த முருகையா மகன் வயனபெருமாள் (37) என்பதும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அவர், கடைகளில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்த பணம், புகையிலை பொருட்களை சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad