வேலூர்,பிப்.5-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கசம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் 350 ஏக்கர் உள்ளது. இதில் ஒரு பகுதியில் சுமார் 275 புளிய மரங்கள் உள்ளன. இந்த புளிய மரங்களில் தற்போது சீசன் ஆரம்பித்ததால் புளி காய்த்து தொங்கியது. இதை கண்ட காட்பாடி கே. ஆர். எஸ். நகரைச் சேர்ந்த ரூபஸ் மற்றும் ஜெஸ்டின் ஆகிய இருவரும் ஒடுகத்தூரைச் சேர்ந்த புளி உலுக்கும் ஆட்களை அழைத்து வந்து இந்த இடம் எனக்கு சொந்தம். இதில் உள்ள புளியை உலுக்கி கொள்ளுங்கள் என்று விலைபேசி இரட்டையர்கள் விற்பனை செய்துள்ளனர். இதனை நம்பிய ஒடுக்கத்தூர் புளி வியாபாரிகள் சுமார் 275 மரங்களிலிருந்து 24 மூட்டைகள் புளியை உலுக்கினர். இது குறித்து தகவல் அறிந்த வேலூரைச் சேர்ந்த அகில பாரத இந்து மகா சபா கோட்ட தலைவர் ஸ்ரீநிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கசம் அரசு நிலத்திலிருந்து கடத்த முயன்ற 24 மூட்டை புளியை கைப்பற்றி காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நேரில் ஒப்படைத்தார். இதையடுத்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் ரூபஸ் மற்றும் ஜெஸ்டின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு கும்பல் அரசு நிலத்தில் அத்து மீறி நுழைந்து இப்படி புளியை திருடி கடத்தி விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக